கட்டுரை - 18
பங்குசந்தையில் INTRADAY EXPOSURE வரமா? சாபமா?
கடந்த கட்டுரையில் SHORT SELLING பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் INTRADAY EXPOSURE வரமா? சாபமா? என்பது பற்றி பார்ப்போம். முதலில் EXPOSURE என்றால் என்ன என்று நாம் தெரிந்து கொள்ளலாம். EXPOSURE என்பது நாம் DEMAT A/C வைத்திருக்கும் BROKING நிறுவனம் நமக்கு கொடுக்கக் கூடிய கடனாகும்.
INTRADAY TRADING-ல் EXPOSURE-ன் வட்டிவிகிதம் மிகக்குறைவு. INVESTMENT செய்பவர்களுக்காக கொடுக்கப்படும் EXPOSURE-ன் வட்டி விகிதம் சற்று அதிகம்.
பொதுவாக பங்குசந்தையில் அதிக அளவு பணம் வைத்திருப்பவர்கள் அவர்களுடைய சொந்த பணத்தை கொண்டு பங்குகளை வாங்கி விற்பார்கள். நம்மை போன்ற சாதாரண RETAIL TRADERS குறைந்த அளவு பணமாக 10000 வைத்திருப்போம் அல்லது அதிகபட்சம் 50000 வைத்து TRADE செய்து கொண்டு இருப்போம். இப்போது 10000 வைத்து TRADE செய்யும் நபருக்கு லாபமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
பங்குசந்தையில் பகுதிநேரமாக செயல்படுபவர்களுக்கு பெரிதாக எந்த நஷ்டமும் இல்லை. இதுவே முழுநேரமாக பங்குசந்தையில் செயல்படுபவர்களுக்கு இந்த 300 ரூபாய் போதுமானதாக இருக்காது. இது போன்ற நேரங்களில் EXPOSURE-யை உபயோகப்படுத்துவார்கள். இதே TRADE-யை EXPOSURE வாங்கி செய்யும்பொழுது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1600 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதில் பிரச்சனை என்னவென்றால் EXPOSURE வாங்காமல் குறைந்த பணத்தில் செய்யும்போது நஷ்டமும் சிறிய அளவில் இருக்கும். இதுவே அதிகமாக EXPOSURE வாங்கி விஷயம் தெரியாமல் TRADE செய்பவர்கள் பங்கு சந்தையில் நஷ்டத்தில் சிக்கிக்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் பங்குசந்தையில் நஷ்டமடைய இந்த அணுகுமுறைதான் காரணம். இப்பொழுது என்ன செய்வது EXPOSURE வாங்கலாமா? வேண்டாமா?
என்னை பொறுத்தவரை சரியான முன் திட்டமிடலுடன் பங்குசந்தையில் ஒரு STOCK செய்து நம் தகுதிக்கு ஏற்ப EXPOSURE வாங்கி TRADE செய்யும் பொழுது அதிக லாபத்தை அடைய முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சரியாக ஒரு தொழிலை கற்று தேர்ந்தவர்களுக்கு பணம் ஒரு தடையில்லை. RISK என்ற வார்த்தையை உபயோகப்படுத்த தேவையில்லை. ஏனென்றால் நாம் எவ்வளவு முதலீடு செய்தால் லாபத்துடன் வெளியேற முடியும். எந்த நேரத்தில் TRADE செய்ய வேண்டும், போன்ற அனைத்து விஷயங்களும் கற்று தேர்ந்தவர்களாக நாம் இருப்போம். முறையான பயிற்சியுடன் கூடிய முயற்சி செய்யும்பொழுது EXPOSURE-ல் அதிக லாபம் எடுப்பது எளிது.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment