கட்டுரை - 27
பங்குசந்தையில் தினசரி வர்த்தகம் செய்பவர்கள்(INTRADAY TRADERS) எதை செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது?
கடந்த கட்டுரையில் பயிற்சி வகுப்புக்கு போகலாமா? CALLS வாங்கலாமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் தினசரி வர்த்தகம் செய்பவர்கள்(INTRADAY TRADERS) எதை செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது? என்பது பற்றி பார்ப்போம்.
தினசரி வர்த்தகம் செய்பவர்கள்(INTRADAY TRADERS) எதை செய்ய வேண்டும் :-
முந்தைய நாள்(PRIVIOUS DAY):-
1.ரிசல்ட் காலண்டர்(RESULT CALENDAR) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
2.ஓபன் இன்ட்ரெஸ்ட்(OPEN INTEREST) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
3.CORPORATE ACTIONS என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
4.TREND BREAK OUT PREVIOUS DAY HIGH CUT? இது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
5.GAPE UP, GAPE DOWN பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
இன்று காலை(TODAY MORNING):-
1.எந்த வேலை இருந்தாலும் அவற்றை தவிர்த்து விட்டு கண்டிப்பாக காலை 8.30 மணிக்கு கணினியின் முன் அமர வேண்டும்.
2.காலை 8.30 முதல் 9.00 மணி வரை செய்திகள் சார்ந்த பங்குகளை FILTER செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
3.9.00 மணிக்கு NSE INDIA SITE-ல் PRE OPEN MARKET-யை கவனிக்க வேண்டும். எந்த SECTOR மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி செல்கிறது என்பதை கவனிக்கவும்.
4.TODAY TOP GAINERS, TOP LOSERS பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
5.MOST ACTIVE SECURITIES என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
6.SECTOR INDEX பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
7.BETA VALUE பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
8.9.20க்கு ENTRYஆகி 9.40க்குள் வெளியேறவும். அல்லது 9.40க்கு மேல் ENTRY ஆகி 10.30க்குள் வெளியேறவும்.
சரி எதை செய்யக்கூடாது:-
1.புதியவர்கள் ஒரு TRADE-க்கு மேல் எடுக்கக்கூடாது. கோடி ரூபாய் வரும் என்றாலும் வேண்டாம். ஒரு TRADE எடுக்கவும் அது லாபத்தில் முடியலாம் அல்லது நஷ்டத்தில் முடியலாம் எதுவாக இருந்தாலும், அதோடு TRADING-யை முடித்துக்கொண்டு வெளியே வர வேண்டும். இது கடினம்தான் ஆனால் இதுதான் புதியவர்களுக்கு முதல் பயிற்சியாக இருக்க வேண்டும்.
2.கண்ட நேரத்தில் TRADE எடுக்கக்கூடாது. நேர மேலாண்மை மிக முக்கியம்.
3.கண்ட இடத்தில் TARGET, STOPLOSS வைக்க கூடாது. பணத்தை சரியாக கையாள வேண்டும். MONEY MANAGEMENT மிகவும் முக்கியம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment