கட்டுரை - 26
பங்குச்சந்தை பயிற்சி வகுப்புக்கு போகலாமா? CALLS வாங்கலாமா?
கடந்த கட்டுரையில் PAPER TRADE என்றால் என்ன? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பயிற்சி வகுப்புக்கு போகலாமா? CALLS வாங்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.
பங்குச்சந்தைக்கு புதியதாக வருபவர்கள் பல பேருக்கு இருக்கும் கேள்விகள்தான் இவை. இவற்றில் முதலில் பயிற்சி வகுப்பு பற்றி பார்ப்போம். நிறைய நேர்மையான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன.நீங்கள் DEMAT A/C OPEN செய்யும் BROKING நிறுவனமும்
WEBINAR என பணம் பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். பங்குச்சந்தை பயிற்சி என YOUTUBE-களில் வந்து பயிற்சி எடுக்கின்றனர். அதில் நிறைய விஷயங்கள் சொல்கிறார்கள் ஆனால் இவர்கள் முக்கியமான ஒரு புள்ளியில் அந்த பாடத்தை நிறுத்தி விட்டு நேரடியாக பயிற்சி வகுப்புக்கு அழைக்கின்றனர். இவர்களிடம் பயிற்சிக்கு செல்வது தவறு என்று சொல்ல முடியாது. ஏனெனில் அந்த செலவே செய்யாமல் பங்குசந்தையில் பலத்த நஷ்டத்தை அடைந்தோர் பலர். ஆனால் குறைவான பணவசதி கொண்ட TRADER-கள் அந்த பணத்தைக் கட்டி பயிற்சி பெறுவது என்பது சற்று கடினமானது. சரி CALLS வாங்கலாமா?
இது பங்குசந்தையில் இலவசமாகவும், பணம் பெற்றுக்கொண்டும் வழங்கப்படுகிறது. பங்குச்சந்தை தெரியாத புதியவர்கள் இவற்றை பின்பற்ற கூடாது. இது உண்மையாகவும் இருக்கும். ஒரு சிலர் சொல்லும் CALLS மிகச் சரியாக இருக்கும். அதை அப்படியே பின்பற்றலாம் ஆனால் அதை செய்ய நமக்கு முறையான பயிற்சி தேவை.
சரி பயிற்சி வகுப்பிற்கு செல்ல பணப் பிரச்சனை, CALLS வாங்கினால் அனுபவம் இல்லாமல் வர்த்தகம் செய்யும்போது நஷ்டம் வரும் இப்போது என்னதான் செய்வது...? இங்குதான் நமக்கு PAPER TRADE உதவும், இதில் மேற்சொன்ன பயிற்சி வகுப்புகளில் சொல்லும் விஷயங்களை PAPER TRADE செய்து பயிற்சி பெற வேண்டும். CALLS கொடுத்தாலும் அவற்றையும் PAPER TRADE பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும் விட LIVE MARKET அதாவது நடப்பு பங்குசந்தையில் பங்குச்சந்தை நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும். அதை நாம் கவனித்து வர்த்தகம் செய்யும்போது அடுத்தவர் சொன்ன பங்குகளை வாங்க தேவை இல்லை. நமக்கே சரியாக IDEA கிடைக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் சொந்த மூளையைக் கொண்டு ஒரு பொருளை சரியாகத் தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொள்வோம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment