கட்டுரை - 3
பங்குச்சந்தை தினசரி வர்த்தகத்தில் (INTRADAY TRADING) நஷ்டமடைபவர்கள் 85% லாபமடைபவர்கள் 15% மட்டுமே ஏன்?
பெரும்பாலும் இந்த 85% பேர் நம்மைப்போல சிறு , குறு வர்த்தகர்களாக உள்ளனர். சரியான புரிதல் இல்லாமலும், பயிற்சி இல்லாமலும் போய் சிக்கிக்கொள்கின்றனர். இதுதான் காரணம்.
1.பிறகு விற்று விட்டு வெளியே வரவும் முடியாமல், உள்ளே காத்திருக்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
2.தினசரி வர்த்தகம் மிகவும் குறுகிய நேரத்திற்குள் செய்ய வேண்டிய வர்த்தகம் ஆகும். நமக்கு இருக்கும் நேரம் வெறும் 6 மணி நேரம் மட்டுமே.
3.அதனால் அந்த நேரத்தில் வர்த்தகத்தை முடித்து வெளியே வருவது என்பது சவாலான விஷயம்.
4.இந்த தொழிலை முறையாக கற்று அறிந்தவர்களே சிரமப்படும் சூழ்நிலை இருக்கும் நேரத்தில், சரியான தகவல்கள் இல்லாமலும் விஷயம் தெரியாமலும் TRADE பண்ணுவதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
5.மேலும் இது ஆழ்மனதில் பதியப்படும் தவறான பதிவுகளினால் ஏற்படுகிறது.
7.ஒரு குறிப்பிட்ட % பணத்திற்கு ஆசைப்படாமல் பேராசைப்படுவதும் ஒரு காரணம்.
8.மேலும் தான் முடிவு செய்த விலை (TARGET) வருவதற்கு முன் விற்பது. அதாவது பயத்தினால் விற்பதுவும் ஒரு காரணம்.
9.STOPLOSS தவறான இடத்தில் வைப்பது. இது சம்மந்தமாக தனியாக ஒரு கட்டுரை எழுதுகிறேன். பங்குசந்தையில் முக்கியமான ஒரு விஷயம் STOPLOSS, இதை கற்று கொள்வது மிகவும் முக்கியம்.
10.TREND தெரியாமல் தவறான விலையில் ஒரு பொருளை வாங்கும்பொழுது நஷ்டம் ஏற்படுகிறது. இது தவிர்க்க முடியாதது.
11.எவ்வளவு லாபம் வேண்டும் என்பதை ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னரே தீர்மானிக்க வேண்டும் . முறையான பயிற்சி அவசியம் இஷ்டத்திற்கு TARGET வைத்தால் நஷ்டம்தான் கிடைக்கும்.
12.பயிற்சி எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை அடுத்த அடுத்த கட்டுரைகளில் எழுதுகிறேன்
லாபமடைபவர்கள் 15% மட்டுமே ஏன்?
1.பெரும் பணமுதலைகள் என்று சொல்லக்கூடிய பணம் படைத்தவர்கள்
2.இவர்கள் மிகவும் குறைந்த லாபத்தை எதிர்பார்ப்பார்கள் இவர்கள் மார்க்கெட்டை புரிந்தவர்கள் அதனால் குறைந்த லாபத்தை எதிர்பார்ப்பார்கள் .
3.அடுத்தது TECHNICAL முழுமையாக தெரிந்தவர்கள் இவர்கள் குறைவான பணம் வைத்திருந்தாலும் TECHNICAL அறிவு அதிகமாக இருப்பதால் சரியான லாபத்துடன் இவர்கள் வெளியே வருவார்கள்.
4.நஷ்டத்தை சந்திக்கும் சூழல் வந்தாலும் இவர்கள் அதிலிருந்து தப்பிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள்.
5.ஆக பங்குசந்தையில் எப்பொழுதும் லாபத்துடன் இருக்க ஒன்று பணம் நிறைய இருக்க வேண்டும் அல்லது TECHNICAL அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் இந்த இரண்டில் ஒன்றுதான் வழி.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment