கட்டுரை - 1
பங்குச்சந்தை என்றால் என்ன? பங்குச்சந்தை தொழிலா? சூதாட்டமா?
அறிமுகம்:-
வணக்கம் பங்குசந்தையில் நான் தினசரி வர்த்தகம் செய்து வருகிறேன். நான் எனது பங்கு சந்தை அனுபவங்களை
உங்களுடன் பகிர்ந்து கொண்டு, பங்குச்சந்தையை எப்படி அணுக வேண்டும், எப்படி சம்பாதிப்பது, எப்படி நஷ்டத்தை தவிர்ப்பது போன்ற விஷயங்களை உங்களுடன் அடுத்தடுத்து பகிர்ந்து கொள்ள
இருக்கிறேன் .உங்களின் பேராதரவை எனக்கு தருமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.
நோக்கம்:-
நான் எனது பங்கு
சந்தை அனுபவங்களை கொண்டு புதிதாக பங்குச்சந்தைக்கு வருபவர்கள் மற்றும் ஏற்கனவே பங்குசந்தையில்
நஷ்டத்தை சந்தித்து இருப்பவர்கள் அனைவரும் எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் ,எப்படி
செய்ய கூடாது,ஒரு பங்கை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த விலையில் வாங்க வேண்டும்,
எந்த விலையில் விற்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களையும் படிப்படியாக சொல்லலாம் என்று
முடிவு எடுத்து இருக்கிறேன்.மேலும் நான் புதியதாக தொடங்கியுள்ள இந்த blogஇல் பங்கு சந்தை சம்பந்தமான விஷயங்களை உங்களுக்கு
படிப்படியாக எழுத இருக்கிறேன். இப்பொழுது இன்றைய தலைப்பிற்கு செல்லலாம்.
பங்குச்சந்தை தொழிலா
? சூதாட்டமா ?
பங்குச்சந்தை தொழிலா? சூதாட்டமா? என்பதை பார்ப்பதற்கு
முன்பு பங்குசந்தை என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
1. பங்குசந்தை
என்பது ஒரு நிறுவனத்தில் நாம் பங்குதாரர் ஆவது போன்றதுதான் அதில் வரும் லாபம் நஷ்டம்
நம்மையும் சேரும்
2.
இதில்
பலவகையான இன்வெஸ்ட்மென்ட்கள் (INVESTMENTS) உள்ளது அவற்றை நாம் அடுத்தடுத்த பதிவில்
பாப்போம்.
3.
இன்வெஸ்ட்மென்ட்
(INVESTMENT) மற்றும் டிரேடிங் (TRADING) என்றால் என்ன ? இரண்டிற்கும் உள்ள வேறுபாடு
என்ன என்பது பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.
4.
பங்கு
சந்தை தொழிலா ? சூதாட்டமா என்று பார்த்தால், அது நமது கண்ணோட்டத்தில்தான் உள்ளது.தொழிலாக
பார்த்தால் தொழில், சூதாட்டமாக பார்த்தால் சூதாட்டம்.
5.
உதாரணத்திற்கு
தினசரி வர்த்தகத்தில் இவ்வளவு டிரேடு தான் எடுக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கும்.அதை
சரியாக கடைபிடித்தால் கணிசமான லாபத்துடன் வெளியே வரலாம்.
6.
அதை
விடுத்து மீண்டும் மீண்டும் டிரேடு செய்தால் அது சூதாட்டத்திற்கு சமம்
7.
நிலை
கண்ணாடியின் முன் நின்று நாம் என்ன செய்கிறோம் என்பதை பொறுத்து , நம் பிம்பம் நம்மை
வெளி காட்டும் அல்லவா!
8.
அதை
போலத்தான் நாம் சரியாக செயல்பட்டால் , பங்குசந்தை நம்மிடம் சரியாக செயல்படும் அதாவது
லாபத்தை கொடுக்கும்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment