கட்டுரை - 4
பங்கு சந்தையில் எப்படி நஷ்டத்தை சரி செய்வது? பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
1.புதியதாக பங்குச்சந்தைக்கு வருபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு TRADING தான் ஆரம்ப காலங்களில் எடுக்க வேண்டும்.
அதாவது 1
ENTRY ,1 EXIT இதற்கு மேல் உள்ளே நேரத்தை வீணடிக்க கூடாது. லாபமோ நஷ்டமோ வெளியே வந்து விட வேண்டும்.
2.சரியான திட்டமிடல் அவசியம்.
3..ஆவரேஜ் செய்ய நினைக்க கூடாது.
4.நஷ்டமடைந்த பிறகு பணத்தை மீண்டும் மீண்டும் போட்டு TRADE பண்ணக் கூடாது.
5.எங்கே தவறு செய்தோம் என்பதை தினமும் குறித்து வைத்துக்கொண்டு
அடுத்த நாள் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை நாம் UPDATE செய்து
கொண்டே இருக்க வேண்டும்.
6. தொடர் நஷ்டம் வரும்பொழுது ஒரு குறிப்பிட்ட
காலங்கள் இடைவெளி (BREAK) எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கான தனி கட்டுரையை நான் பிறகு எழுதுகிறேன்.
7.பங்குசந்தையில் வெற்றிபெற TRADE பண்ணும்பொழுது நாம் சந்திக்கும்
நஷ்டங்களில் புதிய புதிய விஷயங்கள் தெரிய வரும். அந்த விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை
நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
8. இதில் மிகவும் முக்கியமானது பண மேலாண்மை
(MONEY MANAGEMENT) எவ்வளவு பணத்துக்கு வாங்குகிறோம்.நமது இன்றைய லாபம் என்ன? நஷ்டம்
வந்தால் நஷ்டம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.
9. நஷ்டத்தடுப்பை
(STOPLOSS) சரியாக பயன்படுத்த வேண்டும்.
10.நேர மேலாண்மையும் (TIME MANAGEMENT) மிக முக்கியமான ஒன்று.
இது பங்குச்சந்தைக்கு மட்டுமல்ல எந்த தொழிலுக்கும் மிகவும் முக்கியமானது. மேற்கூறிய
விஷயங்களை மிகச்சரியாக நாம் பின்பற்றும்பொழுது பெருத்த நஷ்டத்தை தவிர்த்து லாப சதவிகிதத்தை
அதிகரிக்க முடியும்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment