கட்டுரை - 2
பங்குச்சந்தை தினசரி வர்த்தகத்திற்கு (INTRADAY TRADING) தேவையான தகுதிகள் என்ன?
1.DEMAT A/C :-
நாம் வங்கி
கணக்கு வைத்திருப்பது போல பங்குசந்தையில் ஒரு பொருளை வாங்கவோ விற்கவோ DEMAT எனப்படும்
இந்த கணக்கு வைத்திருப்பது அவசியம். பங்குசந்தையில் இதற்கென்றே BROKING நிறுவனங்கள்
உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து DEMAT கணக்கு ஆரம்பிக்கலாம். நான் உபயோகித்துக்கொண்டு
இருக்கும் BROKER லிங்க் ஐ இந்த கட்டுரையின்
இறுதியில் வழங்குகிறேன். விருப்பமுள்ளவர்கள் அதில் கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
2. அடிப்படை கற்றல் (BASIC
LEARNING)
NSE
WEBSITEல் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் மேலும் நான் அடுத்த அடுத்த கட்டுரையில் எழுதும் TECHNICAL விஷயங்களை படிப்படியாகவும்
முழுமையாகவும் கற்று கொள்வது அவசியம். முழுமையாக தெரிந்து கொள்ளாமல் TRADE பண்ண வேண்டாம்.
3. வரைபடம்
பங்குசந்தையில்
தொடர்ந்து செயல்பட வரைபடத்தை கற்றுக்கொள்வது அவசியம் .இதில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன
.அடுத்த அடுத்த பதிவுகளில் நான் எழுதும் TECHNICAL கட்டுரைகளை கவனமாக படித்து கற்று
கொள்ளவும்.
1. முறையான
பயிற்சி(PROPER PRACTICE)
முறையான பயிற்சி
அவசியம் DEMAT கணக்கு ஆரம்பித்த உடனே போய் TRADE பண்ண கூடாது. பள்ளி நாட்களில் தேர்வுக்கு தயார் ஆவோமே
அது போலதான் ஒவ்வொரு நாளும் .சரியான முன் தயாரிப்புகளுடன் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
ஒவ்வொரு நாளும் லாபத்துடன் வெளியே வர முடியும். நஷ்டமடைந்தவர்களுக்கு மட்டும்தான் பயிற்சியின்
அருமை தெரியும் அதனால் படிப்படியாக கற்றுக்கொண்டு,மெதுவாக TRADING ஐ ஆரம்பிக்க வேண்டும்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment