கட்டுரை - 6
பங்குச்சந்தை நஷ்டதடுப்பு (STOPLOSS) என்றால் என்ன? பங்கு சந்தையில் இதன் முக்கியத்துவம் என்ன?
நஷ்டதடுப்பு(STOPLOSS)
பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்.
இது பல்வேறு மாறுபட்ட கருத்து உடையவர்களால் இது தேவை என்றும் , இது தேவையற்றது , மற்றவர்களின்
சுய லாபத்துக்காக உருவாக்கப்பட்டது என்றும் பல்வேறு கருத்துக்கள் உள்ளது.
முதலில் நஷ்டதடுப்பு(STOPLOSS)
என்றால் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். நஷ்டதடுப்பு(STOPLOSS) என்பது பங்குச்சந்தை தரகு நிறுவனங்களால்(BROKING
AGENTS) அவர்களது DEMAT A/Cயை பயன்படுத்தும் வடிக்கையாளர்களுக்காக , அதாவது வாடிக்கையாளர்கள்
நஷ்டமடையாமல் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாதனமாகும்.
நஷ்டதடுப்பு(STOPLOSS)
பற்றி தெரியாமல் ஒரு பொருளை வாங்குவதும்(BUY) , விற்பதும்தான்(SELL)
பங்குசந்தையில் புதிதாக வரும் நிறைய பேரின் பழக்கமாக இருக்கிறது. இதனால் அவர்கள் அடையும்
லாபத்தை விட நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கிறது. இது சார்ந்த புரிதல் இல்லாமல் நஷ்டதடுப்பு(STOPLOSS)
எதற்கு போட வேண்டும்? நான் ஏன் நஷ்டத்தை தீர்மானிக்க
வேண்டும் என பலர் லாபம் அடைய போவதாக நினைத்து கொண்டு இதனை பயன்படுத்தாமல் பெருத்த நஷ்டத்தை அடைகின்றனர்.
ஒரு பொருளை வாங்கி விட்டு
அது லாபம் மட்டுமே தரும் என்று எண்ணுவது பெரும் தவறு. நஷ்டமடையவும் வாய்ப்பு இருக்கலாம்
என முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சரியான ஒரு பங்கை(STOCK) தேர்வு செய்து
சரியான விலையில் வாங்கி(BUY) நஷ்டத்தடுப்பை(STOPLOSS) முடிவு செய்ய வேண்டும். நஷ்டத்தடுப்பை(STOPLOSS)
நீங்கள் முடிவு செய்யவில்லை என்றால் , சந்தை(MARKET) முடிவு செய்து விடும். இதுதான்
தினம் தினம் பங்குசந்தையில்(SHARE MARKET) நடக்கிறது. சந்தை முடிவு செய்யும் பொழுது
, அது பெருத்த நஷ்டமாக அமைந்து விடுகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பங்குச்சந்தை வர்த்தகம் செய்து லாபம் சம்பாரிப்பது என்பது ஒரு உயர்ந்த கட்டிடத்தில், ஒரு கட்டிடத்தில் இருந்து மறு கட்டிடத்திற்கு கயிறு கட்டி கயிற்றின் மேல் நடப்பது போன்றது.கயிற்றின் மேல் நாம் நடக்கும் பொழுது ஒரு வேளை தவறி விழுந்தால் கீழே பாதுகாப்புக்காக ஒரு வலை கட்டி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட பாதுபாப்பு சாதனம்தான் நஷ்டதடுப்பு(STOPLOSS).
நஷ்டத்தடுப்பை எவ்வாறு
பயன்படுத்தி பங்குசந்தையில் தொடர்ச்சியான லாபம் பெறலாம் என்பது பற்றி அடுத்த கட்டுரையில்
பார்ப்போம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment