கட்டுரை - 7
பங்குசந்தையில் TRAILING STOPLOSS மூலம் எப்படி சம்பாதிக்கலாம்?
கடந்த கட்டுரையில் ஸ்டாப்லாஸ்(STOPLOSS)
என்றால் என்ன? என்பது பற்றி பார்த்தோம் . இந்த கட்டுரையில் ஸ்டாப்லாஸ்(STOPLOSS)யை பயன்படுத்தி
எப்படி லாப % சதவிகிதத்தை அதிகரிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
ஒரு பொருளை வாங்கியவுடன்(BUY)
அந்த பொருளுக்கான ஸ்டாப்லாஸ்(STOPLOSS) மற்றும் TARGET ENTRY யை உடனே இடவும்.
உதாரணத்திற்கு அந்த STOCK ன் TARGET 3% என்று வைத்துக்கொண்டால் ஸ்டாப்லாஸ்(STOPLOSS) 1% என்று வைத்துக்கொள்ளலாம். இப்பொழுது இந்த இரண்டு ENTRY-யை வைத்தவுடன், மிக முக்கியமானது TRAILING STOPLOSS இது எவ்வளவு வைக்க வேண்டும் என்றால் , 1% வைக்க வேண்டும். அதாவது மார்க்கெட் 1% மேலே போகும்போது 1% ஸ்டாப்லாஸ்(STOPLOSS) யை மேலே தள்ளி வைக்க வேண்டும்.
ஸ்டாப்லாஸ்(STOPLOSS) யை மார்க்கெட் மேலே போகும்பொழுது 1% சதவிகிதம் , 1% சதவிகிதம் என்று மேலே தள்ளி வைத்துக்கொண்டே செல்ல வேண்டும் .
TARGET - 220 ( விற்கும் விலை)
TRAILING STOPLOSS
=>> >>>>>>>>>> - 202
TRAILING
STOPLOSS =>>>>>>> BUY ENTRY – 200 ( வாங்கும் விலை)
TRAILING STOPLOSS =>>>>>>>>>>>> - 199
STOPLOSS - 197 ( ஸ்டாப்லாஸ் )
உதாரணத்திற்கு 200 ரூபாய்க்கு
ஒரு பொருளை வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம் . இதனுடைய டார்கெட்(TARGET) 220ரூபாய்,
ஸ்டாப்லாஸ்(STOPLOSS) 197 ரூபாய் இந்த ENTRYல் நாம் பிளான்(PLAN) செய்த TARGET கிடைக்கலாம்
அல்லது கிடைக்காமலும் போகலாம் . ஆனால் மார்க்கெட் கீழே திரும்பினால் கட்டாயமாக நாம்
பிளான் செய்த நஷ்டம் கிடைக்கும் . அதை TRAILING STOPLOSS மூலம் தடுக்கலாம் மற்றும்
குறைந்த நஷ்டத்தில் வெளியே வரலாம் அல்லது நஷ்டம் இல்லாமல் இல்லாமல் கமிசன்(COMMISSION)
செலவோடு வெளியே வரலாம் .
மார்க்கெட் நாம் பிளான்
செய்தது போல் மேலே திரும்பினால் மேல் நோக்கி
செல்லும் சந்தையாக(UP TREND MARKET) இருந்தால் நாம் பிளான் செய்த டார்கெட் 220 ரூபாய்
கிடைக்கும் அல்லது அந்த தொகைக்கு மார்க்கெட் செல்லாமல் , மிக அருகில் சென்று திரும்பினால்
நாம் TRAILING STOPLOSS யை மேலே உதாரணத்தில் குறித்தது போல் 197,199,200,202 என்று
மேலே தள்ளி வைத்துக்கொண்டே செல்ல வேண்டும் அப்பொழுது டார்கெட் PRICE ஆன 220 ரூபாய்
வரை சென்று அந்த தொகையை தொடாமல் திரும்பினாலும் ஒரு 218 போன்ற மிக நெருங்கிய தொலைவில்
இருக்கும் பணம் நமக்கு கிடைக்கும்.
இதை இன்னும் புரியும்படி
VEDIO வடிவில் மிக விரைவில் பதிவிடுகிறேன் . மேலும் இந்த முறையில் பங்குசந்தையில்
TECHNICAL வர்த்தகம் செய்யும் பொழுது நஷ்டத்தை தவிர்த்து தினம் , தினம் லாபத்தை அதிகரிக்க
முடியும் .
எந்த நேரத்தில் BUY
ENTRY எடுத்தால் லாபத்துடன் வெளியேறலாம் என்பது பற்றி அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment