கட்டுரை - 25
பங்குசந்தையில் PAPER TRADE என்றால் என்ன?
கடந்த கட்டுரையில் திங்கள் , செவ்வாய் STRATEGY - TARGET, STOPLOSS எப்படி வைக்க வேண்டும்? என்பது பற்றி பார்த்தோம். இந்த
கட்டுரையில் PAPER TRADE என்றால் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
பங்குசந்தையில் புதியதாக வருபவர்களுக்காக உபயோகப்படுத்தும் வார்த்தைதான் PAPER TRADE. ஏற்கனவே பங்குசந்தையில் இருப்பவர்கள் PAPER TRADE செய்யுங்கள் என்று கூறுவார்கள். புதியவர்களுக்கு மட்டுமல்ல பங்குசந்தையில் ஒவ்வொரு நாளும் புதியதாக கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் இதை பயன்படுத்துவார்கள். இது மிக முக்கியமான ஒன்று.
இதை புதியவர்கள் கையாளும் முறைதான் தவறு. ஒரு கட்டிடத்திற்கு BASEMET என்று சொல்லக்கூடிய அடித்தளம் பலமாக அமைந்தால் மட்டுமே அந்த கட்டிடத்தில் அடுக்கு மாடி கட்ட முடியும். அது போல்தான் பங்குச்சந்தைக்கு வருபவர்களுக்கு இந்த BASEMET. இதை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டால் நிரந்தர லாபத்தை அடைய முடியும். புதியவர்கள் ஆரம்பத்தில் PAPER TRADE என நினைத்துக்கொண்டு பங்குகளின் ஆரம்ப விலை மற்றும் முடிவு விலையை எழுதி வைத்துக்கொண்டு, பயிற்சி பெறுவார்கள் இதை DUMMY TRADE என்று கூறுவார்கள்.
பின்பு இந்த பயிற்சியில் தேர்ந்து விட்டதாக தனக்குத்தானே ஒரு போலி நம்பிக்கையை கொடுத்துக்கொண்டு , முழுமையாக பணத்தை முதலீடு செய்து விடுவார்கள். ஆனால் LIVE MARKET, இவர்கள் PAPER TRADE-ல் பார்த்தது போல் இருக்காது. தலைகீழாய் இருக்கும். மிக சாதாரணமாக நஷ்டம் கிடைக்கும். இதற்கு காரணம் முறையற்ற பயிற்சி. PAPER TRADE எப்படி செய்ய வேண்டும் என்றால் உண்மையாகவே(ORIGINAL) ஒரு பங்கை மட்டும் வாங்கி வர்த்தகம் செய்ய வேண்டும். அப்படி செய்யும்பொழுது நமக்கு LIVE MARKET என்றால் என்ன என்பது புரியும். இலாப நஷ்டங்களை கற்றுக்கொள்ள முடியும். வெறுமனே PAPER-ல் மட்டும் எழுதி பயிற்சி பெறுவது தவறு. எந்த ஒரு வேலையாக இருந்தாலும் தொடர் முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் என்பார்கள் அது சரிதான் ஆனால் முயற்சியோடு பயிற்சியும் மிக முக்கியம். இது பங்குச்சந்தைக்கு மிகச்சரியாக பொருந்தும்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment