கட்டுரை - 32
பங்குசந்தை TRADING-ல் ஒழுக்கம் முக்கியமா?
கடந்த கட்டுரையில் FII / DII என்றால் என்ன? இந்த தகவல்கள் INTRADAY TRADING-க்கு அவசியமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பங்குசந்தை TRADING-ல் ஒழுக்கம் முக்கியமா? என்பது பற்றி பார்ப்போம்.
இந்த விஷயத்தைப்பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன். சரி இப்பொழுது இதைப்பற்றி பேசுவோம். ஒழுக்கம் என்ற வார்த்தையை பயன்படுத்தும்பொழுது அனைவருக்குமே கோபம் வரும். ஏன் என் ஒழுக்கத்திற்கு என்ன குறை? என்று கேட்பார்கள்.
சரி பங்குச்சந்தை மட்டுமல்ல. எந்த வேலையாக இருந்தாலும் , தொழிலாக இருந்தாலும் அடிப்படை ஒழுக்கம் முக்கியம். சரியான நேரத்திற்கு ஒரு வேலையை ஆரம்பித்து முடிப்பது, பணத்தை கையாள்வது, சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது என்று இந்த பட்டியல் நீளம்.
இப்பொழுது பங்குசந்தையில் எப்படி ஒழுக்கத்தை கையாள வேண்டும் என்பதை பார்ப்போம்.
நேர மேலாண்மை(TIME MANAGEMENT):-
நேர மேலாண்மை மிக மிக முக்கியம். இது சரியாக இல்லா விட்டால் நமது நஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது.
நிதி மேலாண்மை (MONEY MANAGEMENT):-
பணத்தை சரியாக கையாளத் தெரியாமல் TRADE செய்வதற்கு TRADE எடுக்காமலேயே இருக்கலாம். இன்று இந்த STOCK TRADE செய்ய போகிறேன் இவ்வளவு லாபம், நஷ்டம் வந்தால் இவ்வளவு நஷ்டம் இந்த CALCULATION TRADING-க்கு முன்னரே செய்ய வேண்டும். இதில் எது நடந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்.
2ND TRADE:-
புதியவர்கள் 2-வது TRADE எடுக்க ஆசைப்படக் கூடாது. எடுத்த TRADE லாபத்தில் முடிந்தாலும், நஷ்டத்தில் முடிந்தாலும் வெளியே வந்து விட வேண்டும்.
ஆசை:-
மனித இயல்புகளில் இந்த உணர்வை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. சற்று கடினம்தான் ஆனாலும், அடிப்படை ஆசையோடு நின்று விட வேண்டும். அடுத்த கட்டமான பேராசைக்கு சென்றால் நஷ்டம் நிச்சயம்.
STAYABLE MIND:-
புத்தர் சொன்னது போல் ஆசைப்படுவதை அறவே தவிர்க்க வேண்டும். வேலைக்கு செல்லும்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும் அதை பெற்றுக்கொண்டு வேலையில் மட்டும் நாம் கவனம் செலுத்துவோம் அல்லவா? அது போல இன்று நாம் PLAN செய்தது போல் நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் லாபம் கிடைத்தால் எடுத்துக்கொண்டு வெளியேறி விட வேண்டும். நஷ்டம் கிடைத்தால் ஏற்றுக்கொண்டு வெளியேறி விட வேண்டும். சமநிலை மனதோடு இருக்க வேண்டும்.
இதை கடைபிடிக்கவில்லை என்றால் நம் மனது REVENGE எடுக்க ஆரம்பித்து விடும் அதாவது பழிவாங்கும் TRADE. இதை செய்யும்பொழுது மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து புதைகுழியில் சிக்கியது போல் சூழல் உருவாகும்.
அதனால் மேற்சொன்ன அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்றினால் பங்குச்சந்தையை போல் லாபம் தரும் தொழில் எதுவுமில்லை.
வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment