கட்டுரை - 35
பங்குசந்தையில் RESULT அன்று INVEST செய்யலாமா? TRADE எடுக்கலாமா?
கடந்த கட்டுரையில் பங்குசந்தையில் PRE OPEN MARKET STOCK-கள் விலை ஏறுமா? INTRADAY TRADING-க்கு வாங்குவது சரியா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பங்குசந்தையில் RESULT அன்று INVEST செய்யலாமா? TRADE எடுக்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.
RESULT TRADE எடுக்கலாமா? என்று பார்ப்பதற்கு முன்பு RESULT TRADE என்றால் என்ன? என்பது பற்றி பார்க்கலாம். ரிசல்ட் அன்று ஒரு STOCK-யை SELECT செய்து INVESTMENT அல்லது INTRADAY TRADE செய்வார்கள் இதை RESULT TRADE என கூறுவார்கள். நான் ஏற்கனவே ரிசல்ட் காலண்டரில் சொன்னது போல் காலாண்டு முடிவுகள் ஒவ்வொரு நிறுவனமும் வெளியிடும். இந்த நேரத்தில் அந்த நிறுவனத்தின் லாப நஷ்டத்தைப் பொறுத்து அந்த பங்குகளை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்வார்கள் INVESTOR-கள்.
இதில் பிரச்சனை என்னவென்றால் அதில் சாதகமாக இருக்கும் என்று நினைத்து வாங்கக் கூடிய பங்கு விலை சரியவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. FUNDAMENTAL முழுமையாக தெரியாமல் இந்த STOCK-களை INVESTMENT-க்கு வாங்க கூடாது.
சரி இப்பொழுது இந்த STOCK-களை INTRADAY TRADING-க்கு வாங்கலாமா? வேண்டாமா?
INTRADAY TRADING-யை பொறுத்தவரை, பங்குச்சந்தை ரிசல்ட் அன்று பெருத்த ஏற்றமும், இறக்கமும் கொண்டு செயல்படும். அதனால் மிகச்சரியாக கணிக்க முடியாது.ரிசல்ட் அன்றே TRADE எடுப்பது தேவை இல்லாத ரிஸ்க்-காக அமையும். அதனால் அன்றைய நாள் STOCK-களின் விலை நிலவரத்தை WATCH மட்டும் செய்து விட்டு அதன் பிறகு நமது STRATEGY-யை கொண்டு ANALYSE செய்து நமது STRATEGY-க்கு பொருந்தினால் மட்டும் அடுத்த நாள் TRADING-க்கு எடுக்கலாம்.
வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment