கட்டுரை - 36
பங்குசந்தையில் VOLUME BASED STOCKS வாங்குவது சரியா?
கடந்த கட்டுரையில் பங்குசந்தையில் RESULT அன்று INVEST செய்யலாமா? TRADE எடுக்கலாமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பங்குசந்தையில் VOLUME BASED STOCKS வாங்குவது சரியா ? என்பது பற்றி பார்ப்போம்.
VOLUME BASED STOCKS என்றால் என்ன? என்று முதலில் பார்ப்போம். நாம் HISTORY ANALYSE செய்யும்பொழுது வழக்கமான OPEN, HIGH, LOW, CLOSE-யை பயன்படுத்தி TRADE செய்ய PLAN செய்வது போல் VOLUME மொத்தமாக அன்று எத்தனை பங்குகள் வாங்கப்பட்டு இருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
அதை பொறுத்து இந்த பங்குகளை INVESTMENT அல்லது INTRADAY TRADING-க்கு வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்ய வேண்டும்.
சரி இப்பொழுது இது போன்ற பங்குகளை INVESTMENT-க்கு வாங்கலாமா என்பதைப் பற்றி பார்ப்போம்.
அன்றைய நாளில் அதிக பங்குகள் வாங்கப்பட்டிருக்கும் காரணத்தை முதலில் ஆராய வேண்டும். அதாவது ஏதேனும் செய்தி காரணமாக இருக்கலாம் அல்லது ரிசல்ட் காரணமாக இருக்கலாம் அல்லது GOVERNMENT ஏதாவது நல்ல செய்தி வெளியிட்டு இருக்கலாம் அல்லது உலக அளவில் ஏதேனும் நிதி சார்ந்த நல்ல விஷயங்கள் நிகழ்ந்து இருக்கலாம்.
இதன் காரணமாக அதிக பங்குகள் வாங்கப்பட்டு இருக்கும். இது போன்ற ஏதோ ஒரு நாள் திடீரென ஏற்படும் மாற்றங்களை பொறுத்து INVESTMENT-க்கு எடுப்பது நல்லதல்ல. அடுத்த நாள் அந்த பங்கு தலைகீழாக கீழே இறங்கும் வாய்ப்பும் அதிகம்.
சரி INTRADAY TRADING-க்கு எடுக்கலாமா?
INTRADAY TRADING-யை பொறுத்தவரை நமது வழக்கமான STRATEGY-படி சரியாக ஒரு STOCK-யை தேர்வு செய்து கொண்டு முந்தைய நாளை விட பன்மடங்கு அதாவது 6 அல்லது 7 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு,
முந்தைய நாள் VOLUME : 40000 என்றால்
இன்றைய நாள் VOLUME : 320000
இது போல் இருக்க வேண்டும். இப்படி வழக்கத்திற்கு மாறான அளவுகளில் இருந்தால், அடுத்த நாளுக்கான INTRADAY TRADING-க்கு வாங்கலாம் ஆனால் CALCULATIVE RISK-தான் எடுக்க முடியும். அளவான லாபத்திற்கு மட்டும் ஆசைப்பட வேண்டும். ஏனென்றால் எப்பொழுது வேண்டுமென்றாலும் எதிர் திசையில் சந்தை பயணிக்கலாம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment