கட்டுரை - 29
பங்குசந்தையில் RESULT காலண்டர் பற்றி நாம ஏன் தெரிஞ்சுக்கணும்?
கடந்த கட்டுரையில் NEWS BASED STOCKS INTRADAY TRADING-க்கு எடுக்கலாமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் RESULT காலண்டர் பற்றி பார்ப்போம்.
பங்குசந்தையில் வர்த்தகம் செய்பவர்களில் INVESTER-ஆக இருந்தாலும் சரி TRADER-களாக இருந்தாலும் சரி ரிசல்ட் காலண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
சரி ரிசல்ட் காலண்டர் என்றால் என்ன? என்பது பற்றி பார்ப்போம். ரிசல்ட் காலண்டர் என்பது ஒவ்வொரு நிறுவனமும், காலாண்டு வாரியாக அதன் முடிவு அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் செயல்பாடுகள் மற்றும் லாப நஷ்ட விகிதங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை ரிசல்ட் காலண்டர் என்று கூறுவார்கள். இது TRADER-களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது பாதகமாக இருக்கலாம். இதனை சரியாக புரிந்து கொண்டு அந்த STOCK-களில் TRADING அல்லது INVESTMENT-க்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
காலாண்டு 1 முதல் 4 வரை 4 காலாண்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இதனை 3 , 3 மாதங்களாக பிரித்திருப்பார்கள். ஆங்கிலத்தில் இதனை QUARTER என்று கூறுவார்கள்.
QUARTER 1
QUARTER 1 என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள 3 மாதங்களைக் குறிக்கும். இந்த காலத்தின் ரிசல்ட் அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
QUARTER 2
QUARTER 2 என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள 3 மாதங்களைக் குறிக்கும். இந்த காலத்தின் ரிசல்ட் அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
QUARTER 3
QUARTER 3 என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள 3 மாதங்களைக் குறிக்கும். இந்த காலத்தின் ரிசல்ட் அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
QUARTER 4
QUARTER 4 என்பது ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள 3 மாதங்களைக் குறிக்கும். இந்த காலத்தின் ரிசல்ட் அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
இந்த தகவல்களை GOOGLE-ல் ரிசல்ட் காலண்டர் என்று TYPE செய்தால் பெறலாம். அந்த அந்த நாட்களுக்கான ரிசல்ட் எந்த STOCK-களுக்கு வெளியிடப்பட்டு உள்ளதோ அந்த STOCK-களுக்கான தகவல் அதில் வெளியிடப்பட்டு இருக்கும். இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
சரி ஒரு STOCK-ன் ரிசல்ட்-யை கவனித்து INVESTMENT அல்லது TRADE பண்ணலாமா? வேறொரு கட்டுரையில் எழுதுகிறேன்.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment