கட்டுரை - 43
கடந்த கட்டுரையில் பங்கு சந்தைக்கு வருபவர்களில் அடிப்படை மனநிலை - பார்ட் 2 பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பங்குசந்தையில் நஷ்டத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பார்ப்போம்.
நஷ்டத்திற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்?
1.குறைந்த எண்ணிக்கையில் பங்குகள் வாங்க வேண்டும்:-
குறைந்த எண்ணைக்கையில் பங்குகள் வாங்க வேண்டும். வழக்கமாக EXPOSURE வாங்கி டிரேடு செய்வதை முற்றிலும் நிறுத்தி விட்டு DEMAT அக்கௌன்ட்டில் இருக்கும் சொந்த பணத்திற்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பங்குகளை வர்த்தகம் செய்ய வேண்டும்.
2.நஷ்டத்தைக் குறைக்க வேண்டும்:-
ஒரு வேலை அன்றைய டிரேடு நஷ்டத்தில் முடிவது போல தெரிந்தால் ஸ்டாப்லாஸ் வந்து அடிக்கும்வரை வரை காத்திருக்காமல். குறைந்த நஷ்டத்தில் வெளியேறி விட வேண்டும்.
3.RECOVER TRADE பண்ண கூடாது:-
இழந்த பணத்தை ஈடு கட்ட மீண்டும் மீண்டும் தினசரி வர்த்தகம் செய்ய கூடாது.
4.BREAK எடுக்கணும்:-
குறிப்பிட்ட கால இடைவெளி எடுக்க வேண்டும். அது ஒரு நாளாக, அல்லது ஒரு வாரமாக அல்லது ஒரு மாதமாக கூட இருக்கலாம். மனதை வேறு வேலைக்கு DIVERT செய்ய வேண்டும்.
5.முறையான பயிற்சி:-
மீண்டும் , மீண்டும் முயற்சி செய்வதற்கு முன்பு முறையான பயிற்சி செய்ய வேண்டும். இதுதான் மிக முக்கியமானது.
6.SINGLE SHARE TRADE:-
பயிற்சிக்குப்பின் ஒரு பங்கு அதாவது 100 ரூபாய் பங்கு என்றால் அதை ஒன்று மட்டும் வாங்கி, விற்று பயிற்சி செய்ய வேண்டும். அதன் பின் வழக்கமான வர்த்தகத்தை தொடரலாம்.
7.TIME MANAGEMENT & MONEY MANAGEMENT PRACTICE :-
நேரத்தைக் கடைபிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் பங்குசந்தையில் சம்பாதிக்க தகுதியற்ற நபராக நீங்கள் கருதப்படுவீர்கள். நேரம் அவ்வளவு முக்கியமானது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு வர்த்தகத்தை தொடங்கும் பயிற்சியை எடுக்க வேண்டும்.
பண மேலாண்மை , இதுவும் மிக முக்கியமானது உங்கள் லாப நஷ்டத்தை முடிவு செய்து அதை பங்குசந்தையில் பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.
இவை அனைத்தையும் முறையாக செய்தால் ஒரு விளையாட்டு வீரன் தோல்விக்கு பிறகு கடும் பயிற்சி செய்து அடுத்த போட்டுக்கு தயாராவான் இல்லையா, அது போல் உங்களாலும் உங்கள் நஷ்டத்திற்கு பிறகு பங்குசந்தையில் உங்கள் லாப சதவிகிதத்தை அதிகரிக்க முடியும்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment