பங்குச்சந்தை நல்ல சக்தியா? தீய சக்தியா?
பங்குச்சந்தை பற்றி பேசும்பொழுது இது விவாதத்திற்குரிய விஷயமாகவே நம்மிடையே பார்க்கப்படுகிறது. பெரும்பாலோனோர் இது சூதாட்டம் இதில் பணத்தை முதலீடு செய்தால் அந்த பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. இதில் இறங்கி பைத்தியம் பிடித்தது போல் நான் அலைந்தது போதும். இங்கு பணக்காரர்கள் மட்டுமே பணத்தை அள்ளுகிறார்கள். நம்மை போன்றோர் நஷ்டப்பட்டு மேலும் கடன் வாங்கி டிரேடு செய்து நஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். அதனால் பங்குச்சந்தை நஷ்டத்தை உருவாகும் காரணி என கூறுவார்கள்.
ஒரு சிலர், நான் பங்குசந்தையில் இன்று எவ்வளவு லாபம் சம்பாதித்தேன் தெரியுமா? பங்குச்சந்தையை பற்றி எனக்கு முழுமையாக தெரியும். நான் பங்குச்சந்தை தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறேன் என பெருமை பீத்திக்கொண்டு திரிவார்கள். உண்மையில் அவர்களும் லாபமும் நஷ்டமும் கலந்த வர்த்தகம்தான் செய்வார்கள். ஆனால் தன்னுடைய நஷ்டத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
சிலர் தன்னைப்பற்றி எதுவுமே வெளிப்படுத்தாமல் "இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறான் பாரு" என்று சொல்வார்களே! அது போல் இருப்பார்கள். இவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்தவர்கள் லாப நஷ்டத்தை கடந்தவர்கள். இவர்கள் தெளிவாக தன்னுடைய வேலையில் கவனம் செலுத்துபவர்கள். "பக்கா பிளான்" என்று சொல்வார்களே அதுபோல் இவர்களிடம் தெளிவான டிரேடிங் பிளான் இருக்கும். லாபம் எவ்வளவு வேண்டும், நஷ்டம் எவ்வளவு என முன்கூட்டியே தெளிவான "பிளானிங் சார்ட்" - டோடு டிரேடிங் செய்ய ஆரம்பிப்பார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இது போன்ற பல்வேறு மனநிலை கொண்ட மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். பணத்தை போட்டு பணம் எடுக்கும் தொழில் இது என்று நினைக்கிறார்கள் இது தவறு. பணத்தோடு அறிவையும் முதலீடு செய்யும் சாகச பாதைதான் பங்குச்சந்தை.
நான் ஏற்கனவே சொன்னது போல் "இருக்குற இடம் தெரியாமல் இருக்கிறான் பாரு" என்ற இவ்வகை மனிதர்களுக்கு பங்குச்சந்தை நல்லசக்தி. இவர்கள் பங்குச்சந்தையின் கோர முகத்தை கடந்து வந்த அனுபவசாலிகள்.
பயிற்சி பெறாமல் வெறும் பணத்தை மட்டும் வைத்து டிரேடு செய்து நஷ்டப்பட்டவர்களுக்கு "தீய சக்தி" என்று சொல்ல முடியாது. நேர்மையான நண்பன் என்று சொல்லலாம். அதென்ன நேர்மையான நண்பன்?... நேர்மையான நண்பன் நாம் தவறாக முடிவுகள் எடுக்கும்பொழுது கண்டிப்பார்கள் அல்லவா! எப்படி? சில நேரங்களில் கடுமையாக கூட! அதுபோலதான் பங்குசந்தையும் நம்முடிவு தவறு என்றால் "ஸ்பாட் பனிஷ்மென்ட்" என்று கூறுவர்களே அதுபோல் உடனடி நஷ்டத்தைக் கொடுக்கும். சிறிதும் யோசிக்காது.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment