பங்கு சந்தைக்கு வருபவர்களின் அடிப்படை மனநிலை - பார்ட் 1
இந்த கட்டுரையில் பங்கு சந்தைக்கு வருபவர்களில் அடிப்படை மனநிலை பற்றி பார்ப்போம்.
பங்கு சந்தைக்கு வருபவர்களில் அடிப்படை மனநிலை - பார்ட் 1
பயம்:-
பயம் என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு. ஒரு தவறு செய்யும்பொழுது சாதாரணமாக நாம் பயப்படுவோம். பின்பு திருத்திக்கொண்டு அடுத்தமுறை சரியாக செய்வோம் இது பொதுவாக நாம் செயல்படும் விஷயங்களில். பங்குசந்தையில் பயம் என்பது சற்று வித்தியாசமானது. பக்காவான பிளான் செய்து டிரேடு செய்தாலும் திடீர் நஷ்டம் வரும்பொழுது அதிர்ச்சி கலந்த பயம் வரும்.
இது தவிர்க்க முடியாதது. இந்த பயத்தை வெல்லவும் பயிற்சி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் பங்குசந்தையில் தொடர்ந்து செயல்பட முடியும். சரி எப்படி பயத்தை வெல்வது? ஈஸியாக சொல்லி விடலாம் ஆனால் பயிற்சி இருந்தால்தான் இது சாத்தியப்படும். "போனால் போகட்டும் போடா" என்ற மனநிலையை வளர்க்க வேண்டும். எப்படி? நீங்கள் உங்கள் லாபத்தையும் நஷ்டத்தையும் முக்கியமாக நஷ்டத்தை முடிவு செய்து லாபமோ நஷ்டமோ எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.லாபம் வரும்போது அதிக சந்தோஷப்படுதல், மற்றவருடன் பகிர்ந்து பெருமைப்படுதல் இதெல்லாம் கூடாது.
நஷ்டம் வரும்போது நாம் முடிவு செய்த நஷ்டம்தானே போனால் போகட்டும் நாளைய டிரேடிங் பிளானை செய்வோம் என்ற மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய டிரேடிங் நேரம் முடிந்தால் அடுத்தநாள் எப்படி செயல்பட வேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டும். எக்ஸாம் முடிந்த மாணவன் கேள்வித்தாள் சரிபார்ப்பது போல் இன்று நடந்தவற்றையே நினைத்துக்கொண்டு இருக்கக் கூடாது. அது லாபமாக இருந்தாலும் நஷ்டமாக இருந்தாலும்.
பேராசை:-
பேராசை, இந்த உணர்வு மிகவும் அபத்தமானது. இது அபத்தமானது என்று நம் மூளைக்கு தெரியும் ஆனால் நம் மனது சும்மா இருக்குமா? இருக்கவே இருக்காது. சரி பேராசையை எப்படி வெல்வது? எந்த விஷயத்திற்கும் முடிவு ஒன்றுதான் இருக்கும். நம் லாபத்தை முடிவு செய்வது போல் நஷ்டத்தை செய்கிறோம். லாபம் அதிகரிக்கும் பொது நாம் நினைத்த பணம் கிடைத்தாலும் அதிக நேரம் இன்னும் விலை ஏறும் என காத்திருப்பது. இதுதான் பேராசை.
பின் அடுத்த டிரேடு எடுப்பது. இது போல் செயல்படாமல், போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று கூறுவர்களே அதை போன்று, இப்பொழுது நல்ல ருசியான உணவு சாப்பிடுகிறோம் அதற்காக ஒரு அண்டாவா சாப்பிட முடியும்? நம் வயிற்றுக்கு அளவாகத்தானே சாப்பிட முடியும். அதைபோல நாம் நினைத்த லாபம் கிடைத்தவுடன், நம்மைப்போல பலர் டிரேடு செய்கிறார்கள் அவர்களும் சம்பாதிக்கட்டும் என மின்னல் வேகத்தில் வெளியேறி வேறு வேலையை பார்க்க வேண்டும். அலாவுதீனும் அற்புத விளக்கும் படம் போல் குகைக்குள் சென்று மந்திரம் மறந்த கதையாகி விடும் தாமதமானால்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment