பங்கு சந்தைக்கு வருபவர்களில் அடிப்படை மனநிலை - பார்ட் 2
LOSS RECOVERY MIND (நஷ்டத்தை மீட்கும் மனநிலை):-
பங்குசந்தையில் படுகுழியில் விழுந்தவர்களில் 99 சவிகிதம் பேரின் மனநிலை இதுதான். அவர்கள் தொலைத்த பணத்தை தேடித்தான் அவர்கள் வாழ்க்கையையே தொலைத்து இருப்பார்கள். சரி நஷ்டமடைந்து விட்டது தொலைந்த இடத்தில்தானே தேட முடியும். அவர்களுடைய அறியாமையான மனநிலையில் இது சரி. ஆனால் விளையாட்டு தெரியாமல் மைதானத்திற்கு வந்து விளையாடினால் என்ன நடக்கும்? அதேதான் எந்த தொழிலுக்கும்.
தெரியாத தொழில் செய்தால் நஷ்டமடையும். தெரியாத வேலைக்கு சென்றால் அவமானம் கிடைக்கும். இந்த படிப்பினைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். லாபத்தை ஒருபுறமும் நஷ்டத்தை ஒருபுறமும் வரவு வைத்துக்கொண்டு அதை சமன் செய்ய முயற்சிக்க கூடாது. நாம் பயிற்சிக்காக டிரேடு செய்தோம் என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு 10000 என்று வைத்துக்கொள்வோம்.
இந்த பணம் நஷ்டமடைந்து விட்டது. மீண்டும் பயிற்சி பெற்று புதிய தொழில் தொடங்குவது போல தொடங்கி சிறிய முதலீட்டில் சிறிய சிறிய லாபமாக பெற்று முழுமையாக கற்றுக்கொண்டு அதை சரியாக செய்து தொடர் லாபம் அடைய வேண்டும்.
BREAK (இடைவெளி):-
நாம் நஷ்டமடைந்தவுடன் செய்யும் முதல் தவறு மீண்டும் டிரேடு செய்வது. இந்த தவறை ஒருபொழுதும் செய்ய கூடாது. சரியான MIND MANAGEMENT இல்லையென்றால் சும்மா இருப்பது நல்லது. சரி எவ்வளவு நாள் டிரேடு செய்யாமல் சும்மா இருப்பது? நீங்கள் முறையாக பயிற்சி பெற்று தயாராகி விட்டீர்கள் என உங்களுக்கு நம்பிக்கை வரும் வரை காத்திருக்கலாம் தவறில்லை.
தினமும் இறங்கி நஷ்டமடைவதற்கு இது மேல். பங்குசந்தையில் அனைவரும் INSPIRATION ஆக கருதும் வாரன் பெப்பெட் 10 வருடங்கள் வரை காத்திருந்து தன்னுடைய முதலீட்டை செய்து லாபம் பார்த்திருக்கிறார். அதனால் நமக்கு வாய்ப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். தினமும் ஏதோ கடமைக்காக டிரேடு செய்யக்கூடாது. டிரேடு செய்து நஷ்டமடைந்தால் குறிப்பிட்ட இடைவெளி எடுத்து கற்றலில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
ஏனென்றால் பங்குசந்தையில் உணர்வுகள்தான் ஆதிக்கம் செலுத்தும். அதை நாம் ஆள நமக்கு முழுமையான பயிற்சி தேவை. அதற்கு BREAK தேவைப்பட்டால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment