நீங்க INTROVERT ஆ? (அல்லது) EXTROVERT ஆ? - பங்குச்சந்தை உங்களை எப்படி வெச்சு செய்யும்?
இது போன்ற விஷயங்களை கட்டுரையில் வார்த்தையில் விவரிப்பது சற்று கடினம் ஏனென்றால் இது ஒரு உணர்வு.
இந்த உணர்வை சந்தித்தவர்கள் "அட ஆமால்ல" என்று இந்த கட்டுரையொடு கனெக்ட் ஆகி கொள்வார்கள். மற்றவர்கள் இந்த கட்டுரையை படிக்கும்பொழுது அவர்களுக்கு இது கதையாக தெரியும். ஆனால் இதை சற்று கவனமாக படித்தால் இனி அவர்கள் பங்குசந்தையில் டிரேடு செய்யும்பொழுது நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
INTROVERT:-
இந்த சுபாவம் கொண்டவர்கள் டிரேடிங்கில் ஈடுபட்டு லாபத்தை சந்திக்கும்பொழுது மனதுக்குள் துள்ளி குதிப்பார்கள். அதே வேளை நஷ்டத்தை சந்திக்கும்பொழுது அதிர்ச்சியில் FREEZE ஆகி விடுவார்கள். அதென்ன FREEZE? பிக்பாஸ் ஷோவில் பார்ப்போமே சிலை போல நிற்கும் டாஸ்க். அது போல இயங்காமல் அதிர்ச்சியில் உறைந்து விடுவார்கள். ஆரம்ப காலங்களில் ஸ்டாப்லாஸ்-ன் அருமை தெரியாமல் ஸ்டாப்லாஸ் போடாமல் டிரேடு செய்வார்கள் பிறகு அது குறிப்பிட்ட நஷ்ட அளவை தாண்டி கீழே போகும்பொழுது அதை தடுத்து வெளியே வர இயலாமல் பன்மடங்கு நஷ்டத்தை பெறுவார்கள். திரும்பவும் சந்தை மேலே வரும் என்று குருட்டு நம்பிக்கையில் காத்திருப்பார்கள். அதற்குள் பங்குச்சந்தை நேரமே முடிந்து பெருத்த நஷ்டத்தை தழுவுவார்கள்.
EXTROVERT:-
இவர்கள் அவர்களுக்கு நேரெதிரானவர்கள் லாபம் வரும் பொழுது வெளியே தெரியும் அளவிற்கு துள்ளி குதிப்பார்கள். நஷ்டத்தை சந்திக்கும் பொழுது உணர்ச்சிவசப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
அதென்ன உணர்ச்சிவசம்?
கை கால் நடுங்கி உதறல் எடுத்து எந்த பட்டனை அழுத்துகிறோம் என்று தெரியாமல் SELL-க்கு பதிலாக BUY-யும், BUY-க்கு பதிலாக SELL-ம் செய்வார்கள்.
நஷ்டத்திற்கு பிறகு அதை பற்றி புலம்பி தள்ளி விடுவார்கள்.
இந்த இரண்டு மனநிலையுமே தவறு, அதே நேரத்தில் இது இயல்பானது. INTROVERT குணாதிசயம் கொண்டவர்கள் பிளான் செய்து டிரேடு செய்பவர்கள் திடீர் சூழ்நிலைகளை அவர்கள் சமாளிக்க கஷ்டப்படுவார்கள். அதே நேரத்தில் EXTROVERT குணாதிசயம் கொண்டவர்கள் திடீர் சூழ்நிலைகளை ஓரளவுக்கு சமாளிப்பார்கள் ஆனால் சந்தை கடினமான முகத்தை காட்டும்பொழுது உணர்ச்சிவசப்படுவார்கள்.
இதற்கு என்னதான் செய்வது?
இதற்கு தீர்வு ஏற்கனவே சொன்னது போல் பக்காவான டிரேடிங் பிளான், லாபம் மற்றும் நஷ்டம் இவற்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, இவற்றை விட முக்கியமானது ஸ்டாப்லாஸ். டிரேடு எடுத்தவுடன் ஸ்டாப்லாஸ் போடுவது, லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் ஸ்டாப்லாஸ் போடுவதை நிறுத்த மாட்டேன் என உறுதியாக முடிவெடுப்பது. மேலும் BREAK எடுத்துக்கொண்டு முழுமையாக பயிற்சி பெறுவது. இதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment