கட்டுரை - 23
பங்குசந்தையில் வியாழன் அன்று - TARGET AND STOPLOSS எப்படி வைக்க வேண்டும்?
பங்குசந்தையில் இந்த நாளை EXPIRY DAY என கூறுவார்கள். SWING TRADING-காக வாங்கி வைத்த பங்குகளை மொத்தமாக விற்பார்கள். ஒருபுறம் BANK NIFTY-ல் மொத்தமாக லாபம் அல்ல ஆசைப்பட்டு ஒரு பெரிய சூதாட்டமே நடந்து கொண்டு இருக்கும். லாட்டரி சீட்டு போல BANK NIFTY-யை நிறைய பேர் பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலும் இவற்றில் தோல்வியைத் தழுவுவார்கள். பங்குச்சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் இது போன்ற நாட்களில் புதியவர்கள் அமைதியாக கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும். ஆனால் அவர்களால்தான் சும்மா இருக்க முடியாதே? எப்பொழுதும் போல் இறங்கி ஒரு பெருத்த நஷ்டத்தை சந்திப்பார்கள். சரி இன்றைய STRATEGYபற்றி பார்ப்போம்.
வியாழக்கிழமையை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையில் பங்கு வாங்க கூடாது. குறைந்த எண்ணிக்கையில் பங்குகள் வாங்கி சீக்கிரமாக விற்று விட்டு வெளியே வந்து விட வேண்டும்.
இன்றைய STRATEGY படி TARGET 0.30% வைக்கலாம் STOPLOSS 0.45% வைக்க வேண்டும். TARGET-2 0.45% வைக்கலாம். அதாவது 2012.80-க்கு 20 பங்கு வாங்குகிறோம் என்றால் லாபம் 55 ரூபாய் கிடைக்கும், அல்லது அதிக லாபம் 117 கிடைக்கும். சந்தை எதிர் திசையில் திரும்பினால் நஷ்டம் 247 கிடைக்கும். சரி இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம். லாபம் 55 அல்லது 117-தான் கிடைக்கும் ஆனால் நஷ்டம் மட்டும் 247 என்பது அதிகமாக இருக்கிறதே என்று தோன்றும். இது அதிக ஏற்ற இறக்கம் கொண்ட நாளாக இருப்பதால் அந்த STOPLOSS-க்கு குறைவாக வைத்தால் EASY-யாக TRIGGER ஆகி விடும். பின் எளிதில் நஷ்டம்தான் கிடைக்கும். அதனால் இந்த நாளில் சிறிய லாபத்தில் வெளியேறி விடுவது நல்லது.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment