தேஜாவு - திரை விமர்சனம்:- எழுதிய கதை நிஜமானால்? எப்படி இருக்கிறது தேஜாவு?
கடந்த வாரம்தான் டி பிளாக் என்ற திரில்லர் திரைப்படம் அருள்நிதிக்கு வெளியானது. அதிலிருந்து இந்த படம் எந்த விதத்தில் வேறுபடுகிறது இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
பிரபல எழுத்தாளரான அச்யுத் குமார் எழுதும் கதை நிஜத்தில் அச்சு பிசகாமல் அப்படியே நடக்கிறது. இவர் எழுதும் கதைப்படி போலீஸ் அதிகாரியான மதுபாலாவின் மகள் ஸ்ம்ருதி வெங்கட் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார். இது அப்படியே நிஜத்தில் நடக்க என்ன செய்துவதென்று தெரியாமல் இருக்கும் மதுபாலா, மற்றொரு போலீஸ் அதிகாரியான அருள்நிதியிடம் ரகசியமாக விசாரிப்பதற்காக ஒப்படைக்கிறார்.
தீவிர விசாரணையில் இறங்கும் அருள்நிதிக்கு திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. இறுதியில் மதுபாலாவின் மகள் ஸ்ம்ருதி வெங்கட், யாரால் கடத்தப்பட்டார்? எழுத்தாளர் அச்யுத் குமார் எழுதுவது எப்படி நிஜத்தில் நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி, வழக்கம் போல் திரில்லர் கதைக்களத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பு கதைக்கும் பொருந்துகிறது. போலீஸ் அதிகாரியாக வரும் மதுபாலா, நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார். கதையாசிரியராக வரும் நடிகர் அச்யுத் குமார் தன் வேலையை சரியாக செய்திருக்கிறார். பூஜாவாக நடித்துள்ள நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை திறம்பட செய்துள்ளார். குறைவான காட்சியில் வந்தாலும் பதியும்படி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் காளி வெங்கட்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். குழப்பம் இல்லாத திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்து ரசிக்க வைக்கிறது.
ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. முத்தையாவின் ஒளிப்பதிவு சிறப்பு.
Review Rating - 4.25/5
No comments:
Post a Comment