திருச்சிற்றம்பலம் - திரை விமர்சனம்:- குடும்பங்கள் கொண்டாடும் படமாக ரசிக்க வைக்கிறதா?
பள்ளி, கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் வீடு, வேலை என்று சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தனுஷ். உணவு டெலிவரி பாயாக வேலை செய்யும் தனுசுக்கு, சோகங்கள், சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாக நித்யா மேனன் இருக்கிறார்.
சந்தோஷமாக செல்லும் இவரது வாழ்வில் ஒரு சில காதல் குறிக்கிடுகிறது. அந்த காதல் கைக்கூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் தனுஷ் சாதாரண டீசர்ட் போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு பையனாக கதைக்கு பொருந்தும் தனது டிரேட்மார்க் நடிப்பை கொடுத்துள்ளார். தாத்தாவை நண்பனாக டீல் செய்யும் இவரது உடல் மொழி கவர்கிறது.
நித்யா மேனன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு தோழி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர்.
கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், அனுபவ நடிப்பினை கொடுத்துள்ளார். தாத்தாவாக நடித்திருக்கும் பாரதிராஜா மிகவும் வித்தியாசமான ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நக்கல், லொள்ளு என புதுமையை கடைப்பிடித்துள்ள பாரதிராஜாவின் நடிப்பு ஈர்க்கிறது.
சாதாரண ஒரு கதையை வித்தியாசமாக கொடுத்துள்ளார் இயக்குனர் மித்ரன். தெளிவான திரைக்கதை அமைத்து விருந்து கொடுத்து இருக்கிறார். கதாபாத்திரங்களை திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் மெருகேற்றியிருக்கிறார். ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார் ஓம் பிரகாஷ்.
Review Rating - 4.05/5
No comments:
Post a Comment