விருமன் - திரை விமர்சனம் - 2-வது முறையாக இணைந்த கார்த்தி-முத்தையா கூட்டணி அசத்தியதா?
ஊர் தாசில்தாராக இருக்கிறார் பிரகாஷ் ராஜ். இவருக்கு நான்கு மகன்கள். இதில் கடைசி மகன் கார்த்தி. இவரின் தாய் சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு பிரகாஷ் ராஜ் காரணமாக இருப்பதால் இவரை கொலை செய்ய வேண்டும் என்று கோபத்துடன் இருக்கிறார் கார்த்தி.
ஆனால் பிரகாஷ் ராஜ், கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். இறுதியில் கார்த்தி, பிரகாஷ் ராஜை கொலை செய்தாரா? குடும்பத்தோடு இணைந்தாரா? கார்த்தியை பிரகாஷ் ராஜ் ஏமாற்றி சொத்தை அபகரித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடனம், நக்கல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தந்தை பிரகாஷ் ராஜ் மற்றும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் மோதும் காட்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.(பருத்தி வீரன் மோடுக்கு சென்றிருக்கிறார் என்று சொல்லலாம்).
நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தாசில்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். தான் சொல்வதை யார் கேட்கவில்லை என்றாலும் அவர்களை எதிர்க்கும் கதாபாத்திரம்.
பாசத்தால் ரசிகர்களை கட்டிப் போடுகிறார் ராஜ் கிரண். நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிக்க வைக்கிறார் சூரி. பல இடங்களில் இவரது காமெடி கைகொடுத்து இருக்கிறது.
அப்பா மகன் சண்டை, அண்ணன் தம்பி பாசம் என முத்தையாவின் வழக்கமான டெம்ப்லேட் கதைதான் இருந்தாலும், விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதை அமைத்து ரசிக்க வைக்கிறார். கதாபாத்திரங்களை திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.
Review Rating - 3.25/5
No comments:
Post a Comment