இன்றைய பங்கு சந்தை நிலவரம் - 30.09.2022 - ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அதிகரித்த நம்பிக்கை!
இந்திய ரிசர்வ் வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இதற்கிடையில் தொடக்கத்தில் இந்திய சந்தையானது சரிவில் தொடங்கியிருந்தாலும், வட்டி அதிகரிப்பு எதிரொலியால் மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 285.70 புள்ளிகள் வட்டி அதிகரித்து, 56,124.26 புள்ளிகளாக காணப்பட்டது. இதே நிஃப்டி 83.10 புள்ளிகள் அல்லது 16,735 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.
இதனையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பானது 81.57 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியது. இது கடந்த அமர்வில் 81.85 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தையானது சரிவிலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 145.67 புள்ளிகள் குறைந்து, 56,264.29 புள்ளிகளாக தொடங்கியது. இதே நிஃப்டி 36.10 புள்ளிகள் குறைந்து, 16,782 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 1020 பங்குகள் ஏற்றம் கண்டும், 831 பங்குகள் சரிவிலும், 125 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளில், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்பட்டது. மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்பட்டது. குறிப்பாக பேங்க் நிஃப்டி மட்டும் 1% மேலாக காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஓ என் ஜி சி, ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா, ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், விப்ரோ பங்கு மட்டும் டாப் லாசராக உள்ளது.
தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தையானது சரிவில் காணப்பட்டாலும், 12.49 நிலவரப்படி, சென்செக்ஸ் 57,387.13 புள்ளிகளாக தொடங்கியது. இதே நிஃப்டி 17,103.55 புள்ளிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment