கோப்ரா - திரை விமர்சனம்:- பல கெட் அப் விக்ரம், இமைக்கா நொடிகள் இயக்குனர் கூட்டணி எப்படி இருக்கிறது?
கணக்கு வாத்தியாரான விக்ரம், பிரான்ஸ், ரஷியா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் முக்கிய பிரமுகர்களை வித்தியாசமான முறையில் கொலைகள் செய்கிறார். இதை இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அவருக்கு கிடைக்கிறது.
இறுதியில் விக்ரமை இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான் கண்டுபிடித்தாரா? முக்கிய அதிகாரிகளை விக்ரம் கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம், பல வித்தியாசமான தோற்றங்களில் நடித்து இருக்கிறார். ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆகிய காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அற்புதமாக நடித்து இருக்கிறார். காதலியாக ஶ்ரீ நிதி ஷெட்டி, விக்ரமை துரத்தி துரத்தி காதலித்து அவர் மனதில் மட்டுமில்லாமல் நம் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார்.
இன்டர்போல் ஆபிசர் இர்பான் பதான், கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மற்றொரு கதாநாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் துறுதுறு நடிப்பால் நம்மை கவர்கிறார். மிருணாளினி ரவி கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
விக்ரமை வைத்து பிரம்மாண்ட படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. கதாபாத்திரங்களை திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக விக்ரமுக்கு பல கெட்டப்புகள் போட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக ஆதிரா பாடல் மற்றும் பின்னணி இசைக்கு சபாஷ் போடலாம். புவன் சீனிவாசன் மற்றும் ஹரிஷ் கண்ணன் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
Review Rating - 2.85/5
No comments:
Post a Comment