இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 07.10.2022
ஐஎம்எப் உட்பட பல சர்வதேச நிதி அமைப்புகள் ரெசிஷன் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு மூலம் ஏற்பட்டு உள்ள விலை மாற்றம் சர்வதேச சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை சரிவை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பெரும்பாலான வர்த்தக சந்தையில் சரிவு ஏற்பட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையிலும் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் துவங்கியது.
இதேவேளையில் அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.33 என்ற புதிய வரலாற்று சரிவை பதிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment