இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - 31.03.2023
ஏற்றமடைந்த சென்செக்ஸ்..! உற்சாகத்தில் வர்த்தகர்கள்..!
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி தொடர் ஏற்றத்தில் இருந்தது. மதியம் 12.40 மணியளவில் 17315.30 ஆக இருந்தது. அதன் பின் 2.20 மணியளவில் 17372.15 ஆக இருந்தது. பிறகு மீண்டும் சிறிய அளவில் சரிந்து 3.30 மணியளவில் 17353.10 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் ஏற்றத்தில் 58681.25 என்ற புள்ளியில் தொடங்கி தொடர் ஏற்றத்தில் இருந்தது. மதியம் 12.45 மணியளவில் 58824.81 என்ற அளவில் இருந்த சென்செக்ஸ் புள்ளி அதன் பின் மேலும் ஏற்றமடைந்தது. பின் மீண்டும் தொடர் ஏற்றமடைந்து 3.30 மணியளவில் 58982.55 ஆக முடிவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே இந்தியா லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி லிமிடெட், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், நெஸ்லே இந்தியா லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி லிமிடெட், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஸோன் லிமிடெட், டைட்டன் கம்பெனி, டிவிஸ் லேபரட்டரீஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
No comments:
Post a Comment