"ஜோவிகா வெல்வதற்கு உங்கள் உதவி தேவையில்லை" - வனிதாவிற்கு பிரதீப் பதில்...
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் ஜோவிகாவின் தாய் வனிதா விஜய் குமார் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஒரு நேர்காணல் முடித்து விட்டு வரும்பொழுது பிரதீப் ஆதரவாளர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக இன்று காலை தனது X சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அப்பதிவில், "நான் பிக்பாஸ் நேர்காணல் முடித்துவிட்டு வரும்போது தீடீரென் என் முன்வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 'ரெட் கார்ட் குடுக்கிறீங்களா, அதுக்கு நீ சப்போர்ட் வேற பண்றியா' எனக் கூறி என் முகத்தில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்போகிறேன்" என்று காயம் பட்ட முகத்துடன் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது.
Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I donât deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
Brutally attacked by god knows who ! A so called #PradeepAntony supporter. Finished my #BiggBossTamil7 review and had dinner and walked down to my car i parked in my sister sowmyas house was dark and a man appeared from nowhere and said red card kudukreengala
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பிரதீப், இருவருக்குமான வாட்ஸ் அப் உரையாடலைப் பதிவிட்டுள்ளார். அதில் பிரதீப், 'ஜோவிகாவிற்கு எதிரானவன் நான் இல்லை' என்று விளக்குகிறார். அதற்கு வனிதாவும், 'உன்னை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உனக்கு ரெட் கார்டு கொடுத்தது வருத்தமளிக்கிறது' என்று கூறுகிறார்.
Clarification: I really don't have anything against any of my contestants or anyone. I speak like this with them.@vanithavijayku1 I'm not aware of what happened to you, but I feel sorry for you. Take rest. Jovika is smart, she can win it by herself, she doesn't need your help. https://t.co/MA1dFWjTUF pic.twitter.com/SjmS2A6w9e
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 26, 2023
இந்த வாட்ஸ் அப் உரையாடலைப் பகிர்ந்த பிரதீப், "எனது போட்டியாளர்களுக்கு எதிராகவோ அல்லது யாருக்கும் எதிராகவோ செய்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. நான் வனிதா விஜயக்குமார் அவர்களுடன் இப்படித்தான் பேசுகிறேன். உங்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் நான் உங்களுக்காக வருந்துகிறேன். கொஞ்சம் ஓய்வெடுங்கள்... ஜோவிகா புத்திசாலி, அவர் தானாகவே வெற்றிபெறுவார். அவருக்கு உங்கள் உதவி தேவையில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment